புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்ட மும்மொழித்திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு விரோதமான மும்மொழித்திட்டத்தைத் திணிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.என்றும் தமிழக மக்களின் நலனுக்கும் - மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான - "தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 11 கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இன்று கடிதம் மூலம் வலியுறுத்தினர்,
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர் இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் புதிய கல்விக்கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும்அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்துபின்பற்றும் என்றும் தெரிவித்துள்ளார்,
இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிகல்விஇடம்பெற்றிருப்பதுவேதனையையும்,வருத்தத்தையும்அளிக்கின்றது. என்றும் புதிய கல்வியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்மொழிக்கொள்கையில் மட்டுமல்ல: கல்வி கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையை பறிப்பதாகும் என்றும் திமுக தலைவர்கள் கடிதம் எழுதியிருப்பதாகவும் அதன் அடிப்படையிலும் முதலமைச்சர் தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்,