ரயில்வே போலீஸ் டிஐஐியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஜெயகெளரி நியமிக்கப்பட்டுள்ளார்
செயலாக்க ஐஐி ஆக உள்ள என்.பாஸ்கரன் வண்டலுாரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஐியாக மாற்றப்பட்டுள்ளார், ஏற்கனவே இங்கு ஐஐியாக இருந்த டாக்டர் மகேந்திர குமார் ரத்தோடு மருத்துவ விடுப்பில் உள்ளார்.
சென்னை மாநகர வடக்கு மாவட்ட காவல்துறை இணைகமிஷனராக உள்ள எம்.வி. ஜெயகெளரி ரயில்வே போலீஸ் டிஐஐியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஏற்கனவே ரயில்வே போலீஸ் டிஐஐியாக இருந்த பாண்டியன் வடக்கு மாவட்ட போக்குவரத்து போலீஸ் இணைக்கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்