ஊரடங்கால் 1 லட்சம் திருமணங்கள் ரத்து

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் 1 லட்சம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்யாண மண்டப உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர், 
தமிழ்நாட்டில்  கடந்த மார்ச் மாதம் 24 ம்தேதி முதல் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் திருமணவிழாக்களில் 50 மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது திருமண மண்டபங்களில்  திருமணங்கள் நடத்த ஏறக்குறைய தடை விதிக்கப்பட்டன ,இதனால் தமிழ்நாட்டில் திருமணங்கள் பல தள்ளி வைக்கப்பட்டதாகவும் அவரவர் வீடுகளிலேயே  திருமண விழாக்கள் நடத்தப்பட்டன, இப்படி திருமண மண்டபங்களில் நடைபெற இருந்த  1 லட்சம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதாக திருமண மண்டப உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர், தமிழ்நாட்டில் கிட்டதட்ட 3500 திருமண மண்டபங்கள் உள்ளன,  இந்த திருமண மண்டபங்களில் நடைபெறவிருந்த 1 லட்சம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதால் 20 க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர், திருமண மண்டபங்கள் மூடப்பட்டதால் பேண்டு வாத்தியங்கள்  மங்கள வாத்தியங்கள் இசைப்போர், பூ அலங்காரம் செய்வோர் உள்ளிட்ட 15 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்   திருமண மண்டபங்களை திறப்பது குறித்து தளர்வுகளை அறிவிக்க வேண்டும்என்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்,