மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறு கோயில்களில் வரும் 10 ம்தேதி முதல் தரிசனம் செய்யலாம் என்று ஊரடங்கில் புதிய தளர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புதிய அறிவிப்பு
பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும்
கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய\திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்குமாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய
திருக்கோயில்கள்; அதாவது, 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ளதிருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்,
10 ம்தேதி முதல் தரிசனம்