வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக மூன்றாக பிளந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு விமானி உள்பட 16 பேர் பலியாயினர்
கேரள மாநிலம் கோழிக்காடு மாவட்டம் மலபுரத்தில் நடைபெற்ற இந்த விபத்து அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரபுநாடுகளில் தவித்த கேரள வாசிகளை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான வந்தே பாரத் திட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விமானம் போயிங் 737 வகையை சேர்ந்தது, துபாயில் இருந்து 180 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX-1344) கோழிக்காடு மாவட்டம் மலபுரத்தில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரை இறங்கிக்கொண்டிருந்தது, கொரோனா நோய்த்தொற்று துன்பம் முடிந்தது என்று தாயகத்தில் காலடி வைக்கும் மகிழ்ச்சியில் பயணிகள் ஆழ்ந்திருந்தனர், எல்லா பயணிகளும் தங்களது உடமைகளை அள்ளி கொண்டு வீடுகளுக்கு செல்ல முயன்றபோது தான் விமானம் ஒடுபாதையில் அல்ல: மரண பாதைக்கு சென்றது தெரியவந்தது விமாஓனம் ஒடுபாதையில் இருந்து 6 ஆயிரம் மீட்டர் துாரத்தில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானம் மூன்றாக பிளந்தது.
இந்த சோக சம்பவத்தில் விமானி, துணை விமானி, ஒரு குழந்தை உள்ளிட்ட 16 பேர் பலியானார்கள். விபத்துக்குள்ளான விமானத்தில் 10 குழந்தைகள் 5 பணிப்பெண்கள் உள்ளிட்ட 191 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. அவர்களை மீட்பதற்காக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன, உடனடியாக தேசிய பேரிடர் படையை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டது.
விபத்து நிகழ்ந்த விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. பயணிகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த மற்றவர்கள் படுகாயமடைந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விமானம் மூன்றாக உடைந்தது,சோகமான இந்த சம்பவத்தில் கேரளத்தில் பெருமழை பெய்ததால் உயிர் சேதம் மிகப்பெரிய அளவில் தவிர்க்கப்பட்டது.
இந்திய விமான படையில் பல ஆண்டுகள் போர்விமானங்களை திறம்பட இயக்கி ஜனாதிபதி விருது பெற்றவர் இந்த விமானத்தின் தலைமை விமானி தீபக் சாதே 30 ஆயிரம் மணி நேரம் பல்வேறு விமானங்களை இயக்கிய சாதனையாளர் பணிஓய்விற்கு பின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் விமானியாக பணிக்கு சேர்ந்த தீபக் சாதேவுக்கு மழைக்காலம் பெரும் விபத்தில் கொண்டு போய் சேர்த்தது பெருத்த மழையினால் ஓடு பாதையில் மழை நீர் தேங்கி நின்றதால் விமானத்தை நிறுத்துவது சிரமத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் இதில் விமானிகளின் தவறு ஏதும் இருக்காது என்றும் கருதப்படுகிறது.
இந்த விமானம் முதலில் தரை இறங்க வந்தபோது மோசமான வானிலையின் காரணமாக விமானிகளால் தரையிறங்க முடியாமல்போனதால் அவர்கள் மிஸ்ட் அப்ரோச் (Missed Approach) என்ற முறையில் விமான நிலையத்தை ஒரு முறை வட்டமடித்து மறுபடியும் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்து தரையிறக்கினார். கேரளாவில் பலத்த மழை பெய்துவரும் காரணத்தால் இந்த விமானம் ஓடுபாதையில் மழை தண்ணீர் தேங்கியிருந்ததால் ஓடுபாதையில் முழு நீளமான 6,000 மீட்டரை தாண்டி விமானநிலையத்தில் மதில் சுவற்றில் மோதி ஓடு பாதையின் எல்லையில் உள்ள 35 மீட்டர் பள்ளத்தில் விழுந்து மூன்றாக பிளந்தது.
மோதிய வேகத்தில் விமானத்தின் முன் பகுதியில் இருந்த இரண்டு விமானிகள், பணியாளர்கள் மற்றும் பயணியர் சம்பவ இடத்திலேயே உயிரியந்தனர்.
இந்த விமான நிலையம் தரையிலிலுருந்து 35 மீட்டர் உயரத்தில் டேபிள் டாப் என்று சொல்லக்கூடிய மலை போன்று செய்து அதன் மேல் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தின் ஓடு பாதை சில ஆண்டுகளுக்கு முன்பு தான் 4,500 மீட்டர் நீலத்திலிருந்து 6,000 மீட்டர் நீளமாக அதிகரிக்கப்பட்டது. இந்த விமான நிலையம் பாதுகாப்பற்றது என்று மத்திய விமானநிலைய குழுமத்தினால் ஏற்கனவே சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் விமான நிலையத்தில் ஓடு பாதையின் முடிவில் இருந்த பள்ளத்தில் விழுந்து பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுவும் கூட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 ரக விமானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே , கேரளத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கொடூரமாக தாக்கி கொண்டிருக்கிறது, அடுத்த துயரமாக கேரளத்தின் இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமழையினால் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது,. , கேரளத்தில் ஏற்பட்டுள்ள இந்த விமானவிபத்தால் அம்மாநிலமக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், இந்த நிலையில் விபத்தில் சிக்கிய விமானத்தில் உயிரிழந்தவர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது, எனவே மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது,