வரும் 18 ம்தேதி சென்னையில் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் அறிவித்துள்ளது,
தமிழகத்தில் 3500க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகளும் சென்னை மாநகரில் 450க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகளும் உள்ளன, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்ட மதுபானக்கடைகள் மற்ற மாவட்டங்களில் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது, இடையில் தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மதுபான கடைகள் அனைத்து மாவட்டங்களிலும் மூடப்படும், இதனால் சனிக்கிழமைகளில் மதுபானக்கடைகளுக்கு குடிமக்கள் ஆயிரக்கணக்கில் தவமிருந்தனர், இதில் மதுபான கடைகள் மூலமே ஒரே நாளில் சனிக்கிழமைகளில் ரூ 170 கோடி வரை விற்பனை எகிறியது, இந்த நிலையில் வரும் 18 ம்தேதி சென்னை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மால்கள் நோய்க்கட்டுபாட்டு மையங்கள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மற்ற இடங்களில் உள்ள மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்படும் என்றும் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படு்ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்றும் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, இதற்கிடையில் 37 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் வாரந்தோறும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழந்தால் முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ 50 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு பணியாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் பால் பாண்டி வலியுறுத்தியுள்ளார் இந்த நிலையில் சென்னையில் மதுபானக்கடைகள் திறப்புக்கு எதிராக எந்த கட்சியும் போராட்டம் அறிவிக்கவில்லை : நாளை வழக்குகள் தொடரவும் போராட்டம் அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது,