பள்ளி மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு

 அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 17 ம்தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார், ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம்தேதி நடைபெறும் என்றும் பிளஸ்1 மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 24 ம்தேதி துவங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரோ மாணவரோ வருகை தருகையில்  சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் கண்டிப்பாக முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார், மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி,கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு அறிவிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார், 


இதற்கிடையில் நாடாளுமன்ற மனிதவளமேம்பாட்டுத்துறையின் நிலைக்குழுக்கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது, இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை செயலாளர் அமித்கரே கொரோனா நோய்த்தொற்று இன்னமும் கட்டுக்குள் வரவில்லை. எனவே பள்ளிகள் கல்லுாரிகள் திறப்பு டிசம்பர் மாதம் வரைக்கும் இல்லை என்று அவர் தெரிவித்தார், எனினும் மாநில அரசுகள் பள்ளிகள் கல்லுாரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,