பஸ் ஒடும்ஃ : கோவில்களில் தரிசனம் இ பாஸ் ரத்து
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ம்தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும்: இ பாஸ் முறை ரத்து செய்யப்படும் கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்
*மாவட்டங்களுக்குள் வாகனங்களில் பயணம் செய்வதற்கான இபாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது என்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விமானம் ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைய இ பாஸ் முறை தொடரு்ம,
*அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் பக்தர்கள் தரிசனத்திற்கென வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கான தரிசனம் அனுமதிக்கப்படும், *மாவட்டத்திற்குள் பொதுமற்றும் தனியார் பேருந்து வசதி மற்றும் சென்னை பெருநகர பேருந்து சேவை வரும் 1 ம்தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும் 7 ம்தேதி முதல் செயல்படும்,
*தமிழ்நாடு முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை செயல்படலாம். உணவகங்கள் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்
தொழிற்சாலைகள் தொழிற்நிறுவனஙற்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
*பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் திறப்பு : பொழுது போக்கு பூங்காக்களுக்கு அனுமதியில்லை.
*அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் பணியிடங்களில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒரு வரை தொடர்பு அலுவலராக நியமித்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும் அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்,
*நீலகிரி, கொடைக்கானல் ஏற்காடு போன்ர இடங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை கட்டுபடுத்த கலெக்டர் அனுமதியுடன் இ பாஸ் பெற்று செல்ல வேண்டும்
படப்பிடிப்புகளுக்கு 78 பேருக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி
* ஞாயிற்றுக்கிழமை தளர்வற்ற முழு ஊரடங்கு ரத்து
*15 ம்தேதிக்கு பின்னர் பயணியர் ரயில்களை இயக்குவது குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவு
*ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடரும்
மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் கல்விநிறுவனங்கள் செயல்பட தடை நீடிக்கும் இந்த நிறுவனங்கள் இணைய வழி கற்றலை தொடர்ந்து ஊக்குவிக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,