எங்கள் வீட்டு பூஜை அறை : உதயநிதி தகவல்

 


எங்கள் வீட்டில் பூஜை அறை உண்டு, அதில் முதாதையர்களின் உருவப்படங்கள்  இருக்கின்றன என்ற புதிய தகவலை திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி வெளியிட்டுள்ளார் 
இது குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி வெளியிட்ட அறிக்கை 
எனக்கோ என்மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு, என்பதை அனைவரும் அறிவர் எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு, அதில் எங்கள் முதாதையர்களின் உருவப்படங்கள் உள்ளன, மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு, முக்கியமான முடிவெடுக்கும் போது அங்குளள முதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்து விட்டு செய்வது எங்கள் வழக்கம்   
இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக  அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார், அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள் இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார், இந்த சிலை களிமண்ணில் செய்தது, தண்ணீரில் கரைக்க எடுத்து சென்று விடுவார்கள், என்றேன், இந்த சிலையை எதற்கு தண்ணீரில் போடணும், என்று கேட்டார், அது தான் முறை என்கிறார்கள் அடுத்த வருஷத்திற்கு புதிதாக வேறொன்று வாங்குவார்கள் என்றேன், 
கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டார் அவரின் விருப்பத்தின் பேரில் நான் தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன் மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்திற்காக என் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தேன் அவ்வளவே  இவ்வாறு அந்த அறிக்கையில்  உதயநிதி தெரிவித்துள்ளார்,