தமிழகத்தில் 2 மணிநேரம் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் பால்பாண்டி செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 50 லட்சம் நிவாரணமும் வாரிசு ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 ஆம்ச கோரிக்கைகளை நாளை மறுநாள் 2 மணிநேரம் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், ஏற்கனவே இது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்,.
டாஸ்மாக் கடைகள் 2 மணிநேரம் அடைப்பு