செப்டம்பர் 28 ம்தேதி கோயம்பேடு மார்க்கெட் திறப்பு
*கோயம்பேடு மார்க்கெட்டை திறப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான ஆலோசனை நடத்தினார், மேலும் கோயம்பேடு வணிகவளாகத்தை அதிகாாரிகளுடன் ஆய்வு செய்தார் இதையடுத்து வரும் செப்டம்பர் 18 ம்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த மளிகைக்கடைகள் திறக்கப்படும் என்றும் அடுத்த கட்டமாக செப்டம்பர் 28 ம்தேதி மொத்த காய்கறி மார்க்கெட் திறக்கப்படும் என்று துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்
,
அகில இந்தியாவின் குரலாக விஸ்வரூபமெடுத்து வருகிறது, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று நடத்திய காணொளி காட்சி கூட்டத்தில் மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நீட் தேர்வு அவசியம் இல்லை, ஐஐடிக்கான தேர்வுகளையும் ஒத்தி வைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள், காங்கிரஸ் மாநில முதலமைச்சர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழகம் திணறிக்கொண்டிருக்கிறது,
இதற்கிடையில் நீட் தேர்வு வரும் 13 ம்தேதி நடைபெறும் என்று தேதியை அறிவித்து ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது, இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத இதுவரை 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் வ விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும் அதற்காக நுழைவுச்சீட்டுகளை 10 லட்சம் மாணவர்கள் பெற்று விட்டனர் என்றும் அதேபோல் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை எழுத 8 லட்சத்து 58 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர்களில் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் நுழைவுச்சீட்டுகளை பெற்று மாணவர்கள் தேர்வு எழுத ஆர்வத்துடன் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது,
நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தமிழகத்தில் உரத்த குரல் எழுப்பி.க்
சட்டரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுசெயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது
முதலில் மத்திய அரசின் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அறிவார்ந்த முறையில் சிந்திக்க வேண்டும் மனிதநேயத்தோடு இந்த பிரச்னையை அணுக வேண்டும், கொடிய கொரோனா காலத்தில் கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது, அதில் பங்கேற்ற மாணவர் ஒருவர் இறந்து போனார், அது ஒரே நாளில் முடிந்து போன செய்தியானது, ஆனால் அந்த மாணவரை பற்றி யாரும் கவலைக்கொள்ளவில்லை, ஆனால் அவரை பெற்ற மனம் என்ன பாடுபட்டிருக்கும், என்பது அரசாங்கத்திற்கு தெரியாது,
இன்றைக்கு கோவியட் 19 நோய்த்தொற்றை எதிர்த்து தீரத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் நோயை குணப்படுத்த போராடி வருகிறார்களே டாக்டர்கள் அவர்கள் நீட் தேர்வு எழுதி.க்ஷக்ஷக்ஷதேர்ச்சி பெற்றவர்கள் அல்லர் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் , சாதாரண காலக்கட்டத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை எப்படியெல்லாம் சோதனை செய்தீர்கள் இப்போது என்ன செய்ய போகீறீர்கள். ஒவ்வொரு மாணவனும் பிளஸ் 2 படித்து தானே தேர்ச்சி பெறுகிறான், அப்படியானால் உங்களது கல்வி முறையை பற்றி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு கேட்டார்,
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறுகையில்
நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு.என்று கூறியுள்ளார் ன
இது குறித்து பாஜக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பியுள்ள கேள்விகள் இந்தியாவில் இப்போது தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட்டுவிட்டது. 140 பேர் பாதிக்கப்பட்ட போதும், 3975 பேர் பாதிக்கப்பட்ட போதும், 20,903 பேர் பாதிக்கப்பட்ட போதும் நடத்த முடியாத நீட் தேர்வை, தினசரி 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் போது மத்திய அரசு எவ்வாறு பாதுகாப்பாக நடத்தும்?
இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேரும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள தேர்வு மையங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, போதிய இடைவெளி விட்டு, இவ்வளவு பேரையும் பாதுகாப்பாக அமர்த்தி நுழைவுத்தேர்வு எழுத வைப்பது என்பது சாத்தியமே இல்லை. என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
*சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ 2 கோடி கேட்டு அச்சக அதிபரை கடத்திய மூவரை முத்தியால் பேட்டை போலீசார் கைது செய்திருக்கிறார்கள், இதில் கடத்தல் பேர்வழிகள் குறித்து எந்த புகாரும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
*கந்தர் சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட கருப்பர் கூட்டத்தின் யூடியூப் சேனல் கார்த்திக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை அளித்திருக்கிறது,
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு உருவாக்கியுள்ள போர்டெலில் 50 ஆயிரம் பேர் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தனர், இவர்களில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
*ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது,
*காவிரி படுகை மாவட்டங்களை சிறப்பு வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த தமிழக அரசு, அதற்காக வேளாண் துறை முதன்மை செயலாளர் தலைமையில் புதிய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது,
*பஞ்சாப்பில் மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்,
*சென்னை மாநகராட்சி நடத்திய 37 ஆயிரத்து 883 காய்ச்சல் தடுப்பு முகாம்களினால் 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்,
அரியர்களின் அரசனே
*பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் சூடம் ஏற்றி கற்பூர ஆராதனை செய்து வாழ்த்தினார், இப்போது இறுதி செமஸ்டரை தவிர ்அரியர்களை ரத்து செய்ததால் மாணவர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது, இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி அரியர்களின் அரசனே என்று பேனரே வைத்து விட்டார்கள்
*காப்பீட்டுத்திட்டத்திற்கான சலுகைகள் இருந்தும் நான்கு நாட்கள் மருத்துவ சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக கொரோனா நோயாளிக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் பில் கேட்டதாக சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை மீது அறப்போர் இயக்கம் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது,
* ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் இதற்காக மாற்றாக செப்டம்பர் 12 ம்தேதி பணிநாளாக கடைபிடிக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார், 31 ம்தேதி உள்ளுர் விடுமுறையானாலும் அரசு சார் கருவூல அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
*ஜனவரி 2021 வருகிறது நாம் இருவர் அல்ல: மூவர் என்று மகிழ்ச்சி தரும் செய்தியை கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நட்சத்திர நாயகி அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒருசேர டுவிட் செய்துள்ளனர், இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் தம்பதியராய் திருமணப்பந்தத்தில் இணைந்தனர்,
அமைச்சரிடம் விசாரணை
*உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அமைச்சர் பாண்டியராஜன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் ஆகியோரிடம் சட்டபேரவைத்தலைவர் தனபால் காணொளி முலம் சுமார் 2 மணிநேரம் இன்று விசாரணை நடத்தினார்
,