அமைச்சர் பாண்டியராஜன் தனக்கு நள்ளிரவில் வந்த போன்கால் குறித்து அதிர்ச்சியுடனும் சற்று நெகிழ்ச்சியுடனும் கூறினார்,
சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா நோய்த்தடுப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை நியமித்துள்ளார், கடந்த சில நாட்களுக்கு நள்ளிரவில் திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அரைத்துாக்கத்தில் தொலைபேசி எடுத்தேன், மறுமுனையில் அந்த மண்டலத்தில் களப்பணியாற்றும் பெண் ஒருவர், நாம் கொரோனா நோய்த்தொற்றில் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் முதியவர், கவலைக்கிடமாக இருக்கிறார், உதவுங்கள் என்று ப்ளீஸ் என்று பதட்டத்தோடு தெரிவித்தார், அடுத்த நிமிடத்தில் சம்பந்தப்பட்டமருத்துவமனை அதிகாரிகளுக்கு போன் செய்து விவரத்தை கூறினேன், அன்று மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்தவர், இப்போது கவலையில்லாமல் இருக்கிறார், அந்த நள்ளிரவு களப்பணியாளரின் போன்காலை நினைத்து நெகிழ்ந்து போனேன், ஒருவரை மருத்துவமனையில் சேர்த்தால் மட்டும் போதாது, அவரை நலமுடன் பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அந்த களப்பணியாளரை நோயாளிகள் காலமெல்லாம் நன்றியோடு நினைத்து பார்ப்பார்கள், அது தான் உங்கள் பணியின் பெருமை சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறிய நெகிழ்ச்சியான சம்பவம் இது
இந்த சம்பவத்தின் போது தங்களுக்கு இன்னும் இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று களப்பணியாளர்கள் தெரிவித்தபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது