கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் வணிகர்கள் வணிகம் செய்வதில் தான் முழு ஈடுபாட்டை செலுத்துவார்கள் ஆனால் வடசென்னை வணிகர்கள் சங்கத்தலைவர் ராபர்ட் , பொதுமக்களின் உடல் நலத்தில் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறார், கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு தொடங்கியதில் இருந்து தொழிலை முடித்து விட்டு நாள்தோறும் மாலை வேளைகளில் சாலையோரங்களில் உள்ள முதியோர்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கு உணவுப்பொட்டலங்கள், பகல் வேளைகளில் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள், எஞ்சியிருக்கும் நேரங்களில் முகக்கவசங்களை ஒவ்வொரு பகுதியாக வழங்குவது என்று தீவிரம் காட்டி வருகிறார்,
இது குறித்து ராபர்ட் கூறுகையில், பொதுமக்கள் ஒருவரும் கொரோனா நோய்த்தொற்றால் அவதிபடக்கூடாது அப்பொழுது தான் அவர்கள் கடைகளுக்கும் தேடி வர முடியும், பொருட்களை வாங்க முடியும் அதனால் வணிகர்களுக்கும் வணிகம் நடக்கும் . மக்களுக்கான உதவிப்பணிகளில் நான் மட்டும் ஈடுபாடு காட்டவில்லை, என்னோடு சாந்தி சாரிஸ் சரவண குமார், உள்ளிட்ட நண்பர்களும் ஆர்வத்தோடு வருகிறார்கள், என்னென்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தாராளமாக நிதி உதவி அளிக்கிறார்கள், இது வரை நானும் பார்த்து விட்டேன் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் நோய்த்தொற்றில் சிக்கவில்லை. அவர்கள் நெருக்கமாக வசித்தாலும் நெரிசல் மிக்க பகுதிகளில் பணியாற்றினாலும் நோய்த்தொற்று அவர்களை அண்டவில்லை. ஒரு வேளை அந்த பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று அதிகமிருக்கலாம். நடுத்தர மக்கள் தான் அதிகமாக பாதிப்பதாக என்னுடைய பார்வைக்கு தெரிகிறது, இதுவரை 1600 லிட்டர் கபசுர குடிநீர் வழங்கியிருக்கிறோம், 120 நாட்களில் தினமும் 20 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கியிருககிறோம், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர மக்களுக்கு உணவு வழங்கியிருக்கிறோம், எங்களால் ஆயிரக்கணக்கில் மக்கள் நோய்த்தொற்று இல்லாமல் இருந்தால்.., பட்டினி கிடக்காமல் இருந்தால் அதிலும் முகக்கவசங்களை முழுவதுமாக அணிந்தால் அது தான் மகிழ்ச்சி தரும் என்கிறார் ராபர்ட்
தினம் ஒரு உதவி சேவை செய்யும் வணிகர்