முதல்வருக்கு மார்க்சிஸ்ட் புதிய கோரிக்கை

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்  என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயற்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது  இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்  மும்மொழிக்கொள்கையை கைவிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு  தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது என்றும்  புதிய கல்விக்கொள்கையை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும்  புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தாது என்று மத்திய அரசிடம் உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்,