தோனியின் அடுத்த இன்னிங்ஸ் : ஸ்டாலின் வாழ்த்து

கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனியின் அடுத்த இன்னிங்ஸ்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் 
இது குறித்து திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான  மு.க.ஸ்டாலின் .வெளியிட்டசுட்டுரை( டுவிட்டர் )பதிவு 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி  ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும்  வேதனையை தரும் செய்தியாகும் நெருக்கடியான தருணங்களிலும்  தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் கூல் அவர், கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாததது  கிரிக்கெட்டுக்கு பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன் என்று  பதிவிட்டுள்ளார்   தோனியின் அடுத்த இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக ஆங்கிலத்தில்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,  தனது பதிவில் கலைஞருடனான தோனியின் சந்திப்பு புகைப்படத்தையும்  அவர் பகிர்ந்துள்ளார்