இளநிலை மற்றும் எம்.சி.ஏ படிப்பிற்கான இணைய வழி வகுப்புகள் நாளை முதல் துவக்கப்படும் என்று
சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது இது குறித்து பல்கலைக்கழகம் சார்ந்த கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
வரும் 2020-21 ஆம் கல்வியாண்டில் இளநிலை மற்றும் எம்.சி.ஏ. படிப்புக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு படிப்புகளுக்கும் முதுநிலைபடிப்புக்கான மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்புக்கான இணையதள வகுப்புகள் திங்கட்கிழமை ( ஆகஸ்ட் 3) முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, . மாணவர்களின் செல்போன் எண்கள், இ மெயில் முகவரி போன்றவற்றை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்வதோடு அவற்றை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு இணையதள வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவர்கள் குறித்து உரிய வகையில் பதிவு செய்யவேண்டும் என்றும் துறைத்தலைவர்களுக்கு முறைப்படி தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. .. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இணைய வழியில் கற்பித்தலுக்கு தகவல் தொழில் நுட்ப பு வசதிகளை செய்து தர வேண்டும் என்று கல்லுாரி நிர்வாகங்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . செய்முறை கல்வியும் இணையவழியிலேயே மூலமே மேற்கொள்ள வேண்டும் என்றும் ,தேர்வுகள் நடத்துதல் விடைத்தாள்களை , மதிப்பீடு செய்தல் போன்றவற்றையம் இணையம் மூலமே மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது .,அனைத்து பட்டப்படிப்புகளுக்கு முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் வரும் 19ம்தேதி முதல் தொடங்கும், என்றும் .செப்டம்பர் 10 ம்தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,
ஆன்லைன் கல்வி ஆரம்பம்