அதிமுகவின் கொள்கைகளை நன்றாக தெரிந்து கொண்டு அதை மக்களிடம் தெளிவாக பரப்புங்கள் என்று நடிகை விந்தியாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்,
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நடிகை விந்தியாவுக்கு கட்சியில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பதவியை வழங்கப்பட்டுள்ளது இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து விந்தியா ஆசி பெற்றிருக்கிறார், அப்போது முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கே.பழனிசாமி கூறிய அறிவுரை குறித்து நடிகை விந்தியா கூறியது:
கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்ட பின்னர் :முதலமைச்சரை சந்தித்தேன் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்டார். இது மிகவும் முக்கியமான பொறுப்பு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்,. உங்களுக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டதன் காரணம் உங்களுடைய நேர்மையும் விசுவாசமும் தான், அதனால் அதை எப்போதும் கடைபிடியுங்கள் , அதிமுகவின் கொள்கைகளை நன்றாக தெரிந்து கொண்டு அதை தெளிவாக பரப்புங்கள், உங்களுக்கு புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை, உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்