செப்- 30 ம்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு
*வரும் செப்டம்பர் 30 ம்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
வரும் 30 ம்தேதி வரை பள்ளிகள் கல்லுாரிகளுக்கு விடுமுறை நீடிக்கப்படுகிறது, எதற்கெல்லாம் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது,
9 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம்,
வரும் 7 ம்தேதி முதல் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கலாம்,. பள்ளிகளில் 50 சதவீதம் ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதிக்கலாம்,
அரசியல் சமூகம் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் வரை முகக்கவசம், சமூக இடைவெளியோடு கடைபிடிக்க அனுமதிக்கலாம்
, வரும் 21 ம்தேதி தியேட்டர்களை , திறக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,
மத்திய அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அறிவித்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் ஆய்வு நடத்தினார், தமிழகத்தில் ஊரடங்கு நிலை குறித்து நாளை அறிவிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நாளை மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு குறித்து எந்த மாற்றமும் இல்லை என்று தெரிகிறது,
எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் வாழ்த்து மழை தமிழ்நாட்டில் இறுதி செமஸ்டர் தவிர அரியர் தேர்வுகளை ரத்து செய்தததை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி அரியலூரில் அரியர்களின் அரசனை என்று மாணவர்கள் பேனர் வைத்தனர், திசைவிளையில் லட்டு வழங்கி மகிழ்ந்தனர் இம்மாணவர்கள் ஒரு கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தோடு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உருவப்படத்தையும் வைத்திருந்தனர், இந்த நிலையில் இன்று தமிழ் நாளிதழ் ஒன்றில் மாணவர்கள் சார்பில் முழு பக்க விளம்பரம் கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது,கொரோனா காலத்திலும் கடும் மன உளைச்சலுக்கு இடையே பெற்றோர்களிடம் பணம் வாங்கி எடப்பாடி பழனிசாமிக்கு நன்றிக்கடன் செலுத்தியே ஆவது என்று தமிழ்நாட்டு மாணவர்கள் முடிவு செய்து விட்டனர் போலும்
மாணவர்கள் வாழ்த்துக்களை பற்றி குறிப்பிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த புதிய நம்பிக்கையாகவும் புதிய விடியலாகவும் பார்க்கிறார்கள், பல்வேறு பட்டங்களை சூட்டி மகிழ்கிறார்கள், தேர்வுகளை ரத்து செய்து தங்களது மன உளைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கண்கண்ட கடவுளாக பாவிக்கிறார்கள், எங்களை விட மாணவர்கள் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்கிறார்கள், அந்த அளவுக்கு மாணவர்கள் மத்தியில் அவருக்கு அமோக வரவேற்பு இருக்கிறது, என்றார், அதெல்லாம் தேர்தலுக்காக செய்யப்பட்டவை என்று குற்றம்சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார் எந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அரசியல் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்வதை யே தங்களது கடமையாக கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகளை சாடினார், நீட் தேர்வு குறித்து எழுந்த கேள்விக்கு , நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார், நமக்கு நீட் தேர்வு குறித்த நமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் என்றார் அமைச்சர் உதயகுமார்
* கொரோனா நோய்த்தொற்றில் இருந்து அமெரிக்கா்களை பாதுகாக்க தவறி விட்டார் என்று அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் மீது கமலா ஹாரீஸ் குற்றம்சாட்டியுள்ளார் அமெரிக்காவில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோபிடன் அண்மையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
*சென்னையில் ரூ 45.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக 54 பூங்காக்கள் அமைக்க] மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
*சுற்றுச்சூழல் வரைவு சட்டத்தை தமிழில் வழங்கக்கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூஉலகின் நண்பர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர், இது குறித்து மூன்று வாரங்களில் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
* தமிழகம் உள்ள 6 மாநிலங்களில் டாக்டர்கள் உள்ளிட்ட 87 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா
நோய்த்தொற்று பாதிப்பு:
* 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் 73 வது பிறந்தநாள் இன்று பழைய வண்ணாரப்பேட்டையில் கொண்டாடப்பட்டது, இதையொட்டி வடசென்னை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராபர்ட், மீனவர் சங்கத்தின் தலைவர் தயாளன் உள்ளிட்ட 40 பேர் ரத்த தானம் செய்தனர் இந்த கூட்டத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரனின் பெயரை சூட்ட வேண்டு்ம் என்று வலியுறுத்தி தீ்ர்மானமும் நிறைவேற்றப்பட்டது,
*சென்னையில் போதை வியாபாரி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வலியுறுத்தி தாயார் வழக்கு: மறுபிரேத பரிசோதனை செய்யவும் கோரிக்கை
*எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
*கொரோனா நோய்த்தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்து வருவதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது,
*கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ராஜினாமா செய்த அண்ணாமலை அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார், கட்சியில் சேர்ந்த ஒரிரு நாட்களிலேயே அவருக்கு மாநிலத்துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது,
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவருக்கு சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது
*கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பிரபாகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் அவர் தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சியராக ஜெயச்சந்திர பானுரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார் கோவை மாநகராட்சி கமிஷனர் சரவண்குமார் ஜடாவத் மாற்றம் செய்யப்பட்டு வேளாண்துறையின் துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், சென்னை மாநகராட்சியின் துணைக்கமிஷனர் ( பணிகள்) குமாரவேல் பாண்டி.யன் கோவை மாநகராட்சி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்