இ பாஸ் முறையால் உறவினர்களின் இறுதி சடங்குகளுக்கு கூட செல்லமுடியாமல் தொலைவில் இருந்து கதறும் அவலநிலையில் மக்கள் இருக்கிறார்கள், எனவே இ பாஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன,
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்.
திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. உரிய முகாந்திரங்களுடன் பத்து முறை விண்ணப்பித்தாலும், நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை., உற்றார், உறவினர்கள்- உயிர் நண்பர்களின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் தொலைவில் இருந்தே “கதறி அழும்” மிகத் துயரமான சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் 5000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு 'போலி இ-பாஸ்', 'கடலூரில் தலா 500 ரூபாய் வாங்கிக்கொண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஸ்' என்று இ-பாஸ் ஊழல் -'தலைப்புச் செய்தியாக' வந்தாலும் - அ.தி.மு.க. அரசு அவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.மத்திய அரசே ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து, இ-பாஸ் நடைமுறை கட்டாயம் இல்லை' என்று அறிவித்த பிறகு - அ.தி.மு.க. அரசு மட்டும் இந்த முறையை தொடர்ந்து உள்நோக்கத்துடன் வைத்திருப்பது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவிதத்திலும் தீர்வாகாது ஊரடங்குத் தளர்வுகள் கொடுத்து, 'வேலைக்குப் போகலாம், கம்பெனிகள் திறக்கலாம்' என்று ஒருபுறம் அறிவித்துள்ள நிலையில் - இன்னொரு புறம் அவர்களை வீட்டுக்குள்ளே முடக்கும் விதத்தில், அவரவர் சொந்தப் பொறுப்பில் கூட, 'மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம்' என்று அறிவித்திருப்பது முதல்வர் பழனிசாமியின் என்ன வகை கொரோனா நிர்வாகம்?வெளி மாவட்டங்களுக்கு சொந்தப் பொறுப்பில் பயணம் செய்வோருக்கு கொரோனா நோய்த் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் .
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் இறுதி சடங்குகளுக்கு செல்ல, இ -பாஸ்பெற வேண்டும் என்றால், இறப்பு சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது துக்க வீடுகளில்உள்ளவர்கள் உடனடியாக இறப்புச் சான்று பெற்று\ வைக்க இயலாது.. மேலும் ஒருமுறை ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பிறகு அந்த எண்ணைக்கொண்டு, சரியான ஆவணங்களுடன் எத்தனை முறை விண்ணப்பித்தாலும்இ –பாஸ் நிராகரிக்கப்படுகிறது என்றும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு உடனடியாக இ பாஸ் கிடைத்து விடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்