அரசு கல்லுாரிகளின் இன்று ரேங்க் வெளியீடு

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில்  சேர விண்ணப்பித்த


மாணவர்களின் தரவரிசை பட்டியல்  இன்று வெளியாகிறது


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேருவதற்காக 3 லட்சத்து 16 ஆயிரத்து 795 மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர், அதில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 810 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தியுள்ளனர், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர பதிவு செய்துள்ள மாணவர்களின் தர வரிசை பட்டியல் அந்தந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் இணையதளத்தில்  26 ம்தேதி ( இன்று புதன்கிழமை ) வெளியிடப்படும்  அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர்க்கைக்கு தேர்வாகியுள்ள மாணவர்கள் அந்தந்த கல்லுாரி இணையதளம் ( www.tngasa.in)மூலம் சேர்க்கை கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்