பாஜக தலைவர் நட்டாவை சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தின் கட்சிப்பொறுப்புகளை பறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்,
ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், புதுடெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை நேற்று திடீரென சந்தித்தார், அப்போது அவர் பாஜகவில் இணைவதற்காக வரவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நுங்கம் பாக்கம் தொகுதிக்கு இரண்டு லிப்ட்டுகள் வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருப்பதாகவும் கூறினார்,
தமிழக பாஜக தலைவர் முருகனுடன் நட்டா வீட்டுக்கு வந்திருந்த செல்வம், திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்று சீரியஸாக கருத்து கூறினார், இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகளையும் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ராகுல்காந்தியுடன் கூட்டணியை துண்டிக்க வேண்டும் என்றும் கந்தர் சஷடியை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டிக்க வேண்டும் என்றும் உட்கட்சித்தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார், இறுதியாக கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தால் சந்திக்க தயாராக இருப்பதாக திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார் இந்தநிலையில் திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும்
தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும்
தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .மேலும் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸூம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,