இரண்டாவது தலைநகரம் : முதல்வர் முடிவு

தமிழகத்தின் இரண்டாவது தலை நகரம் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆய்வு செய்து சரியான முடிவெடுப்பார் என்று அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார் 
 கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு  நிவாரண பொருட்கள்  வழங்கும் நிகழ்ச்சி மற்றும்  காய்ச்சல் தடுப்பு சிகிச்சை முகாம் ஆகியவை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று  \ நடைபெற்றது இந்த  நிகழ்ச்சியில்  தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு , நலத்திட்ட உதவிகளை வழங்கி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார், இதற்கு பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:  ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்களை அமைக்க வேண்டும் என்று மேற்கொண்ட முடிவின் காரணமாக இந்த கோரிக்கை எழுந்திருக்கிறது, ஏற்கனவே எம்ஜிஆர் காலத்தில்  திருச்சியை தலைநகரமாக்குவது குறித்து கோரிக்கை எழுந்தது நிஜம் அமைச்சர்கள் உதயகுமாரும் செல்லுார் கே.ராஜூவும் மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுப்பியுிருக்கிறார்கள்,இதற்கு அமைச்சர்கள் மத்தியில் ஆதரவு எழுந்திருக்கிறது,  இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியான முடிவெடுப்பார், அவர் முடிவெடுக்கும் வரை என்னை  பொறுத்தவரை எந்த கருத்தும்  கிடையாது,  தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு தனது சக்திக்கு மீறிய வகையில் 10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக செலவழித்துள்ளது,அரசின் வருமானம் என்பது 25 சதவீதத்திற்கு குறைந்திருக்கிறது, இந்த நிலையில் இது சாத்தியமா என்பது குறித்தும்  ஆழ்ந்த கவனத்துடன் முடிவெடுத்து முதலமைச்சர் அறிவிப்பார், சென்னையில் கூட்டத்தை குறைக்க வேண்டும், அதற்கு இந்த முடிவு மாற்றாக இருக்குமா, அல்லது வேறொரு  மாற்று இருக்குமா அப்படியானால் இரண்டாவது தலைநகரம் அமைக்க எவ்வளவு நிதி செலவாகும் இந்த நேரத்தில் இது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார் மேலும் சென்னை நகருக்கு பல்வேறு நகரங்களில்இருந்து1லட்சம் வந்திருப்பதால் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று


அமைச்சர் கேட்டுக்கொண்டார்