"முன்னவனே யானை முகத்தவனே" என்று இந்து மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் அவதாரத் நாளான விநாயகர் சதுர்த்தி இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற் கடவுளாய் இந்து மக்கள் வழிபடுகிறார்கள். தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை ஆகும்.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென, அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை கூறியுள்ளார்,