தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

 


கொரோனா  சிகிச்சைக்காக 19 நாட்களில் ரூ 12 லட்சத்து 20 ஆயிரம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு  அதற்கான அனுமதியை   ரத்து செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது 


இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில்


கொரோனா  சிகிச்சை காரணமாக அதிக நிதிச்சுமைக்கு மக்கள் ஆளாகாதவண்ணம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை, அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணைவழங்கியுள்ளது.இந்த நிலையில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்குரூ.12,20,000/- வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது. மேலும், தனியரதுசிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும்பயன்படுத்தப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டநிலையில்  மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டஅரசு அனுமதி தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணவிவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காகவைக்கப்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறையால்  உரியஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ளகட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது, இதற்கிடையில்  தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று  காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 ஆக உயர்ந்துள்ளது,இதுவரை இந்தியாவிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் 26 லட்சத்து 18 ஆயிரத்து 512 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது 


இன்று  மேலும் 5 ஆயிரத்து 879 பேருக்கு நோய்த்தொற்று  ஏற்பட்டுள்ளது என்றும்  சென்னையில் நோய்த்தொற்று எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது