கடிதத்தையா மதிக்கப்போகிறார்கள்

நீட் தேர்வு குறித்த சட்டமன்றத்தீர்மானத்தை மதிக்காதவர்கள் உங்கள் கடிதத்தையா மதி்க்க போகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் 
இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர்
 நீட் எதிர்ப்பு உண்மையெனி்ல்  7 மாநில அரசுகளை போல தமிழக  அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன், கடிதம் எழுதி இருக்கிறாராம், விஜயபாஸ்கர்  சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதவர்கள்  இவரின் கடிதத்தையா மதிக்கப்போகிறார்கள் ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்று அந்த டுவிட்டில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,