கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மதயாணை புகுந்து நாசம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் ஜூம் மூலம் பேசுகையில் புதிய கல்விக்கொள்கை இப்படித்தான் மோசமாக இருக்கும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி கூறி விட்டார், பொதுத்தேர்வுகளை வரிசையாக நடத்துவதால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் இந்த குழுவின் பல்வேறு அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் கருணாநிதி கூறினார் அவர் எதையெல்லாம் சொல்லி பயந்தாரோ அது தான் இப்போது புதிய கல்விக்கொள்கையாக வந்துள்ளது கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மதயாணை புகுந்து நாசம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக்கொள்கை உருவாக்கியிருப்பதாக பிரதமர் கூறியிருக்கிறார், இந்த திட்டத்தால் மாணவர்கள் பாதியிலேயே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்காது, மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வது தடுக்கப்படும் கல்வி உரிமையை மறுத்து தொழிற்சாலையை நோக்கி துரத்துகிறீர்கள் என்று பிரதமர் மீது ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்
மேலும் இளைஞர் சக்தி இல்லாத இந்தியாவை தான் புதிய கல்விக்கொள்கை உருவாக்கும் இந்த கல்விக்கொள்கையை அனைத்துக்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் ஆளும் கட்சி எதிர்க்க வேண்டும். அதை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,
தமிழ்நாட்டை நாசம் செய்யும் மதயாணை