இறுதிசெமஸ்டர்களை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு


 


இறுதி செமஸ்டர்களை தவிர மற்ற செமஸ்டர் தேர்வு விலக்களிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்


இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  வெளியிட்ட


அறிக்கை –


தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்


அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின்


தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு


பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்


குழுஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து


விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.


இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு


நான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,