சி.எம். வீட்டில் விநாயகர் சதுர்த்தி

 



* கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அச்சுறுத்தலின் காரணமாக வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடும்படி பொதுமக்களுக்கு தமிழக அரசு கேட்டுக்கொண்டது, இதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில்  மனைவி மற்றும் மகனுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார் விநாயகரை பயபக்தியுடன் வழிபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூன்று முறை தோப்புக்கரணங்கள் போட்டார்,  இன்று தான் திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது  


விநாயகரிடம் முருகன் பிரார்த்தனை


* சென்னை கமலாலயத்தில்  பாரதீய ஜனதா கட்சி , விநாயகர் சதுர்த்தியையொட்டி முகக்கவசம் அணிந்த விநாயகர் சிலை, அமைத்து கொண்டாடியது. இந்த நாளில் தமிழகத்தில் சட்டபேரவைத்தேர்தலில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்று விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாக  அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்,  


 


* பகுத்தறிவு இயக்கமான திமுகவும் இப்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட துவங்கி விட்டது  காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்துார் தெற்கு  பகுதியை சேர்ந்த 167 வது வட்ட திமுக செயலாளர் ஜெ. நடராஜன்  சதுர்த்தியையொட்டி கட்சித்தலைவர் ஸ்டாலின்  ஸ்ரீபெரும்புதுார் திமுக எம்.பி. டி.ஆர் .பாலு படங்களுடன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளார், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், , எம்எல்ஏக்கள் நந்தகுமார்,காந்தி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் விநாயகர் சதுர்த்தியைொட்டி  பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தியையொட்டி அப்போதைய திமுக செயல்தலைவர் ஸ்டாலினின்  சமூகவலைதளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டதற்காக கட்சியினருக்கு கலைஞர் டோஸ் விட்டது பலரது நினைவுகளில் இருந்து இன்னும் அகலவில்லை 


 


தோனிக்கு வாழ்த்து 


கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு அறிவிப்பை கேட்டு பிரதமர் மோடி அவருக்கு அனுப்பிய கடிதம்


ஓய்வு பெறுவதாக  தோனி அறிவித்தது கேட்டு 130 கோடி இந்தியர்கள் இந்தியர்கள் வருத்தமடைந்துள்ளனர், 2007 ஆம் ஆண்டு டி.20 உலக கோப்பை போட்டியின் போதும் அதன் பிறகும் பதற்றமான சூழ்நிலையில்  மிகவும் நிதானமாக விளையாடி பெருமை சேர்த்தவர் தோனி,  உங்களின் தலைமை பண்பு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் , 


*தேர்தல் கமிஷனின் புதிய வழிகாட்டுநெறிமுறை
 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்கள், தனிமையில் இருப்பவர்கள், முதியோர்களுக்கு அஞ்சல் வழியில் வாக்குகள் வழங்க முடிவு தேர்தல் கமிஷனின் வழிகாட்டு நெறிமுறைகள் பீகார் சட்டமன்றத்தேர்தலில் முதன்முதலாக அமலாக வாய்ப்புஎலக்ட்ரானிக் இயந்திரங்களில் கொரானா பரவாமல் தடுக்க கையுறை 
 வெப்பமானி பரிசோதனை,  வெப்பநிலை அதிகமிருந்தால் கடைசி நேரத்தில் உரிய பாதுகாப்புடன் வாக்களிக்க அனுமதி 
*கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை 
ஆகஸ்ட் 28 ம்தேதி முதல்  109 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை 
3 லட்சத்து 12,833  மாணவர்கள் விண்ணப்பம், தரவரிசை பட்டியலை தயாரித்து சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு  வரும் ஆகஸ்ட் 26 ம்தேதிக்குள் தெரிவிக்க  உத்தரவு  


*தேசிய நல்லாசிரியர் விருது 
முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ம்தேதி  நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது, ஆசிரியர் தினத்தையொட்டி வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு  இந்தியா முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இதில் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலை ஆசிரியை ஆர்.சி.சரஸ்வதி, செஞ்சி அருகே உள்ள சத்திய மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலிப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்,  தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்த ஆசிரியர் பெருமக்கள் இருவருக்கும் அலைஓசையின் வாழ்த்துக்கள் 


*மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில்  தங்கம் வென்று  சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு  மத்திய அரசின் கேல் ரத்னா விருது
*வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  67 லட்சத்து 37 ஆயிரத்து 785 பேர் வேலை கேட்டு பதிவு 
*முன்னாள் நிதித்துறை செயலாளர்  ராஜீவ்குமாரை புதிய தேர்தல் அதிகாரியாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்,  இந்த பொறுப்பில் இருந்த லவகுசா பதவியில்  இருந்து ராஜினாமா செய்துள்ளார், 
* 5 ஆயிரம் ஆதரவாளர்கள் 3ஆயிரம் தீவிர தொண்டர்களை கொண்ட  அறப்போர் இயக்கம இன்று தனது ஐந்தாண்டு விழாவை கொண்டாடுகிறது


*தமிழக சட்டபேரவைத்தலைவர் தனபால் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கை ஆய்வு செய்தார், தமிழக சட்டபேரவை அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல்  சமூக இடைவெளியுடன் கூட்டத்தொடரை நடத்தும் நோக்கத்தில் அவர் கலைவாணர் அரங்கை பார்வையிட்டதாக கூறப்படுகிறது


* நித்தியானந்தா இன்று கைலாசா நாட்டின்  வர்த்தக நாணயத்தை அறிமுகப்படுத்தினார்,


 


சூரரை போற்று


அக்- 30 ம்தேதி ரீலீஸ்


* ;சூர்யாவின் புதிய ,படமான சூரரை போற்று அக்டோபர்  மாதம் 30 ம்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தின் மூலம் வசூலாகும்  5 கோடி ரூபாய் கொரோனா நோய்த்தொற்று தடு்ப்பு நடவடிக்கைக்காக போராடும்  முன்களப்பணியாளர்களுக்கு  வழங்கப்படும் என்று நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்  


*தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று  இன்று  மேலும் 5 ஆயிரம் 980 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது,ஒரே நாளில் 5 ஆயிரத்து 603 பேருக்கு மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,  மாநிலத்தில் அதிகபட்சமாக தலைநகரமான   1,294    பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நுாற்றுக்கும் மேலிருந்த உயிரிழப்பு இன்று 80 ஆக குறைந்திருக்கிறது,  


* பொதுபோக்குவரத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு   மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்வா கடிதம் எழுதியுள்ளார்,   இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயகுமாரிடம் வினவினர், இது குறித்து  மாநிலத்தின் நோய்த்தொற்று நிலை குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார், 


* தமிழகத்தில் திரையரங்களை திறப்பது குறித்து செப்டம்பர் 1 ம்தேதி முடிவெடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவித்துள்ளார், 


சுங்கக்கட்டணத்திற்கு கண்டனம்


*சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் \கடந்த ஏப்ரல் 16-ஆம்  தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. \, இப்போதுள்ள சூழலில் இந்த கட்டண உயர்வு ஏற்க முடியாதது.இந்த கட்டணத்தை ஒராண்டுகாலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று \ வலியுறுத்தியுள்ளார்,