அடுத்த சி.எம் யார் திணறிய மாஜி

அடுத்த முதலமைச்சர்    எடப்பாடியா  ஸ்டாலினா யார் என்று  திணறலுடன்  திமுகவில் சேர்ந்த  அதிமுக விஐபி 
ஓ.பன்னீர்செல்வம் அணியில்  இருந்த முன்னாள் அதிமுக எம்.பி. டாக்டர் லட்சுமணன் இன்று  ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார், அவர்  தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் , 2021 ஆம்ஆண்டு  மாண்புமிகு அண்ணன் எடப்பாடியை முதலமைச்சராக அமர்த்துவதாக கூறி, தளபதி ஸ்டாலினை முதல்வராக்குவதாக கூறி  திணறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, ,இதை கேட்ட  திமுக பிரமுகர்கள் பழைய ஞாபகத்திலேயே இருக்கிறார் என்று கமெண்ட் அடித்து சிரித்தனர்,  
டாக்டர் லட்சுமணன், ஜெ. காலத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார், அவரது மாவட்ட செயலாளர் பதவி கடந்த ஒராண்டுக்கு முன்பு  அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு  வழங்கப்பட்டது,  ராஜ்யசபா வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை  இதைத்தொடர்ந்து அதிமுக அமைப்புசெயலாளராக இருந்த லட்சுமணன் , இன்று  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்,