]
மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல தமிழர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளனர், பொக்லைன் மூலம் மனிதர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, சில இடங்களில் குடும்பமே காணாமல் போன தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, . கடந்த ஐந்து நாட்களாக புதையுண்ட மனிதர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது, இதுவரை மண்ணில் புதைந்த 51 பேர் உயிரற்ற சடலமாக மீட்கப்பட்டுள்ளனர், கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் இந்த பணியில் மீட்புப்படையினரோடு செல்லப்பிராணி வட்டமிட்டு வரும் காட்சி பலரையும் பரிதாபத்திற்குள்ளாக்கியுள்ளது,
ஒவ்வொரு உடலையும் மீட்டெடுக்கும் போதும் இது நம்ம , எஜமானன் மண்ணில் இருந்து உயிரோடு எழுந்து வர மாட்டானா என்று ஒடி வந்து செல்லபிராணி பார்க்கும் காட்சி பலரை உருக வைத்துள்ளது, , தன்னை வளர்த்த தொழிலாளியின் குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டது என்று. அந்த வாயில்லா ஜீவனுக்கு தெரியாது, ஆனால் நிலச்சரிவில் இருந்து எப்படியோ தப்பித்த இந்த செல்லபிராணி மீட்புப்படையினருடன் சேர்ந்தே தனது எஜமானனை தேடுகிறது, ஆனால் அவர்கள் உணவு உட்கொள்ளும்போது இந்த நாய் மட்டும் சாப்பிட மறுப்பது மீட்பு படை மனிதர்களின் கண்களை குளமாக்கியுள்ளது,