தனித்து போட்டியிட விருப்பம்
அதிமுகவுடன் இப்போதைக்கு கூட்டணி தொடர்கிறது, வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் தனித்து போட்டியிடவே விரும்புகின்றனர்என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறினார்,
பிரச்னை சரியாகும்
கூட்டணிக்குள் பிரச்னை இருந்தாலும் அவையெல்லாம் தேர்தல் நேரத்தில் சரியாகி விடும், என்று மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்,
5,951 பேருக்கு கோவியட் பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 5, 951 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,
இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், மாநிலம் முழுவதும் 52 ஆயிரத்து 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளத்தில் தீ
கேரள மாநில தலைமை செயலகத்தின் பொதுநிர்வாகத்துறை பகுதியில் இன்று மாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து அரசியல் தீயும் பற்றத்தொடங்கியுள்ளது, கேரள தங்கக்கடத்தல் தொடர்பான வழக்கில் பைல்களை ஒப்படைக்க தேசிய புலனாய்வு விசாரணை முகமை கோரிய நிலையில் இந்த விபத்து நேரிட்டிருப்பது, அவை தீயில் அழிந்திருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அச்சம் தெரிவித்துள்ளார் ,
20 ஆயிரம் டயாலிசிஸ்
கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையிலும் பல்வேறு இதர சிகிச்சைகள் தங்குதடையின்றி நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார், கடந்த சில மாதங்களில் 20 ஆயிரத்து 550 டயாலிசிஸ் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகவும் புள்ளிவிபரங்களுடன் அமைச்சர் தெரிவித்துள்ளார்,
ஊரடங்கு முடியுமா
ஏழாவது கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு குறித்து
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் வரும் 29 ம்தேதி ஆலோசனை நடத்துகிறார் அன்று கொரோனா ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய நல்ல தகவலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்
*பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை வெளியாகிறது சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிடுகிறார்,