நாளை மறு நாள் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா
தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும்,
கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது
இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில்
வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில்
கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஏற்கெனவே அதற்கான
ஆணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவரவர்
வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட
அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின்
ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி
நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை
தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு
ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக அரசின் விளக்க அறிக்கைக்கு இடையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் எல் முருகன், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கோரவில்லை., சிலைகள் வைக்கவே அனுமதி கோருகிறோம், டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழக அரசு விநாயகர் சிலைகளுக்கு தடை விதிப்பது ஏன் என்று பாஜ மாநிலத்தலைவர் எல் முருகன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா, கர்நாடகாவின் அரசு பற்றி பெருமை பொங்க கூறியிருக்கும் டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் வார்த்தை அதிமுகவினரை அதிர்ச்சியடையவவைத்துள்ளது,