ராஜபக்சே ராஜ்யம் வந்து விட்ட சூழ்நிலையில் ஈழத்தமிழர்களின் அரைகுறை உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்
இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் சிங்களரிடையே வரலாறு காணாத அளவுக்கு இனவெறியை தூண்டி இதுவரையில்லாத பெரும்பான்மையை ராஜ பக்சே சகோதரர்கள் பெற்றிருக்கின்றனர் அதைப் பயன்படுத்தி, 1987ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை ரத்து செய்ய ராஜபக்சே சகோதரர்கள் தீர்மானித்திருப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார் .
இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் ஒரே குடும்பத்தின் கீழ், அதுவும் போர்க்குற்றங்களை நிகழ்த்திய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்து விட்ட நிலையில், இனி ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் அரைகுறை உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பையும்\உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுமேற்கொள்ள வேண்டும்.என்று தனது அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,