டாஸ்மாக் கடை திறப்புக்கு அவசரம் ஏன்

சென்னையில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் திறக்க அவசரம் ஏன் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார், 
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன “கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பற்றி அரசு கவலைப்படவில்லை  உயிரிழந்த  டாக்டர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவலை கூட அறிவிக்கவில்லை, . அர்ப்பணிப்போடு பணியாற்றும் டாக்டர்களுக்கு  கூட சம்பளத்தை வழங்காமல் உள்ளனர். பேருந்து போக்குவரத்துக்கு  அனுமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மட்டும் அவசரமாக திறக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.


இந்தநிலையில்  டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பாதை என்று பல்வேறு கட்சிகள் அமைப்புகளை  சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்


சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற மக்கள் பாதை மகளிர் அமைப்பின் ஆர்ப்பாட்டத்திற்கு மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதனின் பெயர்த்தி வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்