முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிவேக நடவடிக்கைகளை ஒப்பிடும்போது எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பூஜ்யம் தான் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மார்க் போட்டுள்ளார்,
திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி, திமுகவின் தேர்தல் நடவடிக்கைகளை தடுக்கவே இ பாஸ் திட்டம் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்விஎழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு ஸ்டாலினுக்கு மதிப்பெண் அளித்துள்ளார், கடந்த நான்கு மாதங்களாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினும் அவரது கட்சிக்காரர்களும் எதுவுமே செய்யவில்லை என்று கூறிய அமைச்சர் உதயகுமார், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். முதலமைச்சரை ஒப்பிடும் போது நான்கு மாதங்களாக எதுவுமே செய்யாத ஸ்டாலினுக்கு பூஜ்யம் தான் மதிப்பென்னாக அளிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார் மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளிமாவட்டங்கள் செல்ல வேண்டும் என்று இ பாஸ் வழங்கப்படுகிறது, திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இ பாஸ் வழங்கப்படுகிறது, அதை எளிமைப்படுத்த வருவாய் மாவட்டங்கள் தோறும் தலா 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, அதன் நடவடிக்கைகளை பொறுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்வார் என்று அமைச்சர் உதயகுமார் மேலும் தெரிவித்தார்,