பெரியோர்களே மாணவர்களே வராதீங்க

 


74 ஆம் ஆண்டு கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கு வரவேண்டாம் என்று பொதுமக்கள் மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது


ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்  சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும், கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்ட விசேஷ மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடியேற்றி விடுதலைப்போராட்ட வீரர்களை கெளரவிப்பார், காவல்துறையினரின் கண்கவர் அணி வகுப்புகள் நடைபெறும், இந்த ஆண்டு 74 வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்காக பிரம்மாண்ட மேடைகள் கோட்டைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளன, கடந்த சில நாட்களாக  அதற்கான ஒத்திக்கை அணிவகுப்புகளும் விறுவிறுப்பாக நடந்தன, கொடியேற்று விழாவையொட்டி போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது 
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் , 74 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்  ஆகஸ்ட் 15 ம்தேதி காலை 8.45 மணிக்கு நடைபெறும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் பொதுமக்களும் மாணவர்களும் குழந்தைகளும் பங்கேற்பர் என்றும்  இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி , கல்லுாரி மாணவர்கள், மற்றும் மூத்த குடிமக்கள்  சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிில்  நேரில் கண்டு மகிழுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது