சென்னையில் விவசாய உற்பத்திக்காகவும் , குஜராத்தில் கொரோனா நாேயாளிகள் நலம் பெற வேண்டியும்விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது,
சென்னை திருவொற்றியூரில் பழவகைகளுடன் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேணடியும் மழை பொழிய வழிபடும் வகையில்விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது, , 7 அடி உயரமுள்ள இந்த சிலை திருவொற்றியூர் வடிவும்மன் கோவில் எதிரே உள்ள அப்பர்சாமி தெருவில் வைக்கப்பட்டுள்ளது, வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த விவசாய விநாயகர்,முழுக்க முழுக்க பழங்களால் ஆனது 140 சாத்துக்குடிகள் , 21 கிலோ நெல்லிக்கனிகள், 5 கிலோ தக்காளி மற்றும் ஆப்பிள் பழங்களோடு விவசாய விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது, இந்த சிலைக்கு மூன்று நாட்கள் வழிபாடு நடத்தப்படும் என்றும் மூன்றாம் நாளன்று கடலில் கரைப்பதற்கு பதிலாக விநாயகரின் அங்கமாக உள்ள பழங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அதே போல்குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்த பெண் மருத்துவர் அதிதி மிட்டல். 511 உலர் பழங்களைக் கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். அந்த சிலையை அவர் பணிபுரியும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வழிபடுவதற்காக அமைத்துள்ளார்.10 நாட்கள் மருத்துவமனையில் அருள்பாலிக்கும் இந்த விநாயகர் சிலை .கடைசி நேர பூஜைகளுக்கு பின்னர்.உலர் பழங்கள் அனைத்தும் நோயாளிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும்மருத்துவர் அதிதி தெரிவித்துள்ளார்