சென்னை தண்டையார் பேட்டையில் சின்ன ஸ்டான்லி மருத்துவமனை இன்று காலை திடீரென பெரும் பதட்டத்தில் ஆழ்ந்தது, காம்பவுண்ட் சுவரில் இருந்து பாய்ந்து வந்தது, 11 அடி உயர சாரை பாம்பு படுக்கைகளில் இருந்த நோயாளிகள் எல்லாம் அலறி அடித்து கொண்டு ஓடினர். நல்லவேளை உள்ளே வந்த பாம்பு படமெடுத்து ஆடியதே தவிர யாரையும் கடிக்கவில்லை.
மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் சொன்னதும் விரைந்து வந்தார்கள், தீயணைப்பு படையில் இருந்து பாம்பு பிடி வீரர்கள், சில நிமிடங்களில் பாம்பை பிடித்து பேக்கிங் செய்து கொண்டு சென்றார்கள்,
இது குறித்து சேணியம்மன் நகர் குடியிருப்பு பகுதி மக்கள் தலைவர் பூபாலன் கூறுகையில் இது முதல் முறை அல்ல: இந்த மருத்துவமனை அருகிலேயே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது, அதற்கு அருகிலேயே மாநகராட்சி பள்ளி மற்றும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன, இப்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பாம்புகளுக்கு வசதியாக போய்விட்டது, மாநகராட்சி பள்ளி, அம்மா உணவகம், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி விசிட் அடித்து கொண்டிருக்கிறது, மக்களை கடிக்காமல் இருப்பதற்காக பாம்புகளை பிடிக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.