சமாதிகள் சகதியில் மிதக்கலாமா

 


மும்மொழிக்கொள்கையை ஏற்கவே மாட்டோம், இருமொழிக்கொள்கை யை உயிரென காப்போம் என்று முழக்கங்கள் இப்போது செவிப்பறையை கிழிக்கின்றன,  ஆனால் அதற்காக  தீயில் வெந்த தேகங்களாக இருந்து தமிழ்மொழியை காத்திட்ட தாளமுத்து நடராஜன் ஆகியோர் சமாதியாக உள்ள மூலக்கொத்தளம் மயானம் கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது, 
சென்னையில் புகழ்பெற்ற மயானங்கள் அழகான பூந்தோட்டம் போல மாறி விட்டன. இதற்காக சென்னை மாநகராட்சிக்கு   ஒரு ஒ போடலாம், ஆனால்   மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன் சமாதியாக உள்ள மூலக்கொத்தளம் மட்டும் சுத்தம் இல்லாமல் சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது  


திராவிட இயக்கங்கள் ஆட்சியில்  இருந்தும்  ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்தும்  இந்தி எதிர்ப்பு தியாகிகளின்  நினைவிடம் மும்மொழி கல்வியை எதிர்க்கும்  ஆட்சிகள் அந்த நினைவிடத்தை  சிறப்பாக கட்டிக்காக்காதது தான்   125 ஆண்டுகள் பழமைவாய்ந்த  35,43 ஏக்கர் நிலப்பரப்பிலான  மூலக்கொத்தளம் மயானம் இப்போது சேறும் சகதியுமாக  இருக்கிறது,  முன்னோர்கள் பெருமை பேசும் சமாதிகள், சகதிகளை கண்டு சங்கடத்தில் நெளியும் காட்சியை தினமும் காணலாம், அத்தனைக்கும் காரணம் மயானத்தில் மிச்சமிருக்கும் இடத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, அதை கட்டிய புண்ணியவான்கள் , கழிவுநீர் தொட்டிகளை சரியாக  கட்டாததாலோ என்னவோ சமாதிகள் சேற்றில் மிதக்கிறது , மூலக்கொத்தளம் மயானத்தில்   வழியெங்கும்  எலும்பு கூடுகள் படு  பயங்கரமாக காணப்படும்,  சினிமா இயக்குனர்கள்  வந்தால் கண்டிப்பாக இங்கே உங்கள் திகில் காட்சிகளை படமாக்கலாம்,  இது ஒரு பக்கமிருக்க  கட்டிட கழிவுகளை கொட்ட சமாதிகளை இடிக்கவுமான வேலைகள் நடந்த வண்ணமிருக்கின்றன, சுற்றுச்சுவர் கட்டித்தந்தால் கொஞ்சம் புண்ணியமா போகும்  செத்துப்போன சொந்தகாரங்களை கும்பிட்டுட்டு போவோம் என்கிறார்கள் சமாதிகளை கோவிலாக நினைக்கும் மக்கள்