கோயம்பேடு திறப்பு: வணிகர்கள் மோதல்

கோயம்பேடு மார்க்கெட்டை திறப்பதற்காக முழு அடைப்பு நடத்துவது தொடர்பாக  வணிகர் சங்கங்களுக்கு இடையே கடும் மோதல் எழுந்துள்ளது 
கோயம்பேடு மார்க்கெட்டை திறக்காவிட்டால் வரும்  10 ம்தேதி தமிழ்நாடு முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார், இதற்கு  வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்  கடும் எதி்ர்ப்பு தெரிவித்துள்ளார் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கக்கோரி நடக்கும் எந்த போராட்டமும் நியாயமானது என்று கூறியுள்ள அவர்  அதே சமயத்தில்  கொரோனா காலக்கட்டத்தில்  போராட்டங்கள் அறிவுப்பூர்வமாகவும்  முன்னெச்சரிக்கையோடும் நடத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்   கடையடைப்பு நடத்துவதற்காக ஆகஸ்ட் 10ம்தேதியை தேர்ந்தெடுத்திருப்பது எந்தவிதத்திலும் விவேகம் அல்ல என்றும் ஆகஸ்ட் 9 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு முழு முடக்கத்தை அமல்படுத்தும் நிலையில் மறு நாளும் கடைகளை அடைப்பது பொறுப்பற்ற செயலாகிவிடும் என்று கண்டித்துள்ளார், ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் கடைகளை அடைப்பதால்  செவ்வாய்க்கிழமையன்றும் மக்கள் கடைகளில் குவிவதை தடுக்க முடியாது என்றும் தேவையற்ற கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டால் அந்த பழியிலிருந்து  வணிகர் சமூகம் விடுபட முடியாது  என்றும் 
 வெள்ளையன் கூறியுள்ளார் 
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்ட  கோயம் பேடு மார்க்கெட் திறக்கப்பட வேண்டும்  அதற்கு மாற்றாக அமைக்கப்பட்டிருக்கும் திருமழிசை வணிக வளாகம் நெடுந்தூரம் இருப்பதால் வணிகர்களுக்கு இடையூறு இருப்பதும் அடிக்கடி காய்கறி விலைகள் உயர்ந்து பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது, எனவே மூடப்பட்ட  கோயம்பேடு சந்தையை வெகுவிரைவில் திறக்க  அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும், காலதாமதப்படுத்தினால் வணிகர்களுக்கு  புது புது சந்தேகங்களை தான் ஏற்படுத்தும் . சென்னையில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில்  வியாபாரிகளுக்கு  தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தி  மார்க்கெட்டை திறப்பது வியாபாரிகளுக்கு மட்டுமல்ல: பொதுமக்களுக்கும் நல்லது 
அதே சமயத்தில் இதில்  வணிகர் சங்கங்கள் தங்களுக்குள் இருக்கும்  கருத்துமோதல்களை தாங்களே தீர்வு கண்டு போராட்ட வடிவங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும் அறிக்கை போர் விட்டு பிரச்னைகளை பெரிதாகக்கூடாது பொதுமக்களுக்கும் வீண் சிரமங்களை ஏற்படுத்தக்கூடாது என்பது தான் அனைத்து தரப்பினரின் எதிர்ப்பார்ப்பாகும்