மதுரையும் இல்லை: திருச்சியும் இல்லை

மதுரை மாவட்டத்தை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று  அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார் ,செல்லுார் கே.ராஜூ ஆகியோர் வலியுறுத்தி வந்தனர், இதற்கு  அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தனர், இதற்கிடையில் திருச்சியை தலைநகரமாக்க வேண்டும் என்று அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும்  அத்தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசரும் கொடி பிடித்தனர்.ஹக்ஷஇது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியான முடிவெடுப்பார் என்று அமைச்சர் பாண்டியராஜன் , ஜெயகுமார்  ஆகியோர் தெரிவித்திருந்தனர், இந்த நிலையில்  இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்திக்கையில் இரண்டாவது தலைநகரம் குறித்த கருத்து, அமைச்சர்களுடையது தான், அரசின்  கருத்தல்ல: என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இரண்டாவது மதுரையும் இல்லை: திருச்சியும் இல்லை என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெள்ளத்தெளிவாக  முடிவை அறிவித்து விட்டார்,