எஸ்.பி.பி உடல்நிலையில் மு்ன்னேற்றம்

தமிழகத்தின் இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த  எஸ்.பி.பாலசுப்ரமணியம்  கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் அவரது உடல் சற்று கவலைப்பட கூடிய அளவில் இருக்கிறது என்பதும்  லட்சக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது,இன்று மாலையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் இருந்து வந்த தகவல், அவர் சிகிச்சை பெறும்  நிலையில்  வெளியான புகைப்படம் எல்லாமே  வேறு வேறான தகவல்களை தந்தன, இந்த நிலையில்  அவரது மகன் எஸ்.பி.பி.சரண் , எஸ்.பி. பாலசுப்ரமணியன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார், அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து பூரண குணமடைய வேண்டும் என்று  இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்  பலர் நோய்களில் இருந்து குணமடைய இசை மருந்தாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம்,  இங்கே இசையே நோய்வாய்ப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதை நம்ப முடியவில்லை, விரைவில் குணமடைந்து இசை வாழ்க்கையை  எஸ்.பி.பி.இனிமையாக தொடர வேண்டும் என்று கோடான கோடி ரசிகர்கள் சார்பில் நாமும் வேண்டிக்கொள்வோம்