ராமதாஸ் வருத்தம்

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கான    இழப்பீடு  25 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதற்கு  டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார் 
இது குறித்து  பா.ம.க. நிறுவனர்  டாக்டர் ராமதாஸின் சுட்டுரை (டுவிட்டர்)  பதிவு 


. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு  ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அறிவித்த தொகையை வழங்க வேண்டும்


கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற வேண்டும். இதன்மூலம் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்; அரசுக்கும் அதிக செலவு ஏற்படாது!என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்,