முதலமைச்சர் வேட்பாளர் யுத்தம்


 


நான்காவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் 
இந்தியாவின்  74 வது சுதந்திர தின நிகழ்ச்சி சென்னை கோட்டை வளாகத்தில் இன்றுகாலை கொண்டாடப்பட்டது  இந்த விழாவில் காவல்துறையினரின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றினார், இதைத்தொடர்ந்து சுதந்திர தினத்தையொட்டி உரையாற்றிய அவர், கொரோனா நோய்த்தொற்று மிகுந்த இந்த காலக்கட்டத்தில் பணியாற்றி வரும் டாக்டர்கள் .செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார், சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு  நினைவிடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் திறக்கப்படும் என்று அறிவித்தார், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும்  ஓய்வூதியம்  16 ஆயிரம் ரூபாயிலிருந்து 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்  குடும்ப ஓய்வூதியம்  8 ஆயிரத்தில் இருந்து 8500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு  அல்லும் பகலும் உங்களுக்காகவே தொடர்ந்து உழைத்து கொண்டே இருப்பேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறினார் 
இந்த நிகழ்ச்சியில் துணிவு மற்று் சாகச செயல்களுக்கான க்ல்பனா சாவ்லா விருதினை பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த  செந்தமிழ் செல்வி,முத்தம்மாள் ஆனந்த வள்ளி ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்,  கொரோனா தடுப்புப்பணிகளுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருதினை உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் செளமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் 



 


இந்த நிலையில் அடுத்த ஆண்டு  சுதந்திர தின கொடியை ஏற்ற போகிறவர் யார் என்பது குறித்து அதிமுகவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது,  அமைச்சர்கள் தொடங்கிய விவாதத்திற்கு இடையே சமூக வலைதளங்களில் தொண்டர்களை தங்களது பதிவுகளை  தொடங்கியுள்ளனர் அதையும் தாண்டி போஸ்டர் யுத்தமும் நடந்து வருகிறது. போடி தொகுதியில்  ஜெயலலிதா ஆசி  பெற்ற முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தான் என்று அக்கட்சியின் தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்,  இதைத்தொடர்ந்து  துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர், இந்த பேச்சுவார்த்தையின் போது  முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆலோசனை  நடந்திருப்பதாக கூறப்படுகிறது, ஆலோசனையில் தெரிவிக்கப்பட்  விவரங்களை  மூத்த அமைச்சர்கள்,   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் வகையிலேயே  இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது,  இந்த நிலையில அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையின்   அதிமுகவின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜனநாயக ரீதியில் அதிமுக  தலைமை விரிவாக ஆலோசித்து, தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும். என்றும் . கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும்,  தலைமையின் ஒப்புதல் இல்லாமல், ஊடகங்களில்  தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். என்றும்   மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த யுத்தத்திற்கு தற்காலிகமாக  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது, இன்னும் ஆறு மாதத்தில் மீண்டும் ஒரு யுத்தம் நடைபெறுவதற்கு வாய்ப்பிருப்பதாகவே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,



இதற்கிடையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகமான  அறிவாலயத்தில்  சுதந்திர தினத்தையொட்டி  தேசியக்கொடி ஏற்றினார், தேசிய கொடி ஏற்றிய ஸ்டாலினுக்கு திமுக தொண்டர் அணியினர் அணி வகுப்பு மரியாதை செலுத்தினார், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் அதிமுக அமைச்சரவைில் அங்கம் வகித்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் , திமுகவில் இணைந்தார்