பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் துணையோடு குழப்பம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகர் மண்டலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், அரசியலில் கடந்த காலத்தை போல இப்போது நாகரீகம் இல்லை, தரம் தாழ்ந்த வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது. அந்த ஒற்றுமையை குலைப்பதற்காகவும் அதன் வாக்கு வங்கியை சிதைப்பதற்காகவும் எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன அதற்கு பெயர் ஐபேக் என்கிறார்கள் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.. முன்னதாக திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய மாநகராட்சி ஊழியர்களை அமைச்சர் உதயகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார்,
எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தும் குழப்பம்