மதுசூதனனுக்கு எலும்பு முறிவு
*அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென்று வண்ணாரப்பேட்டைக்கு வந்தார், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மதுசூதனன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது , முதலமைச்சரிடம் மதுசூதனன் தனது வலது கைகளில் போடப்பட்டிருந்த கட்டுக்களை காட்டினார், இதற்கிடையில் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து பூங்கொத்து வழங்கி பூரண குணமடைந்திட வாழ்த்து கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, வடசென்னையின் மிக பிரபலமான அரசியல்வாதியாக விளங்கும் மதுசூதனன், சார்பட்டா பரம்பரை என்றழைக்கப்படும் குத்துச்சண்டை வீரரும் கூட
செய்திகள் வாசிப்பது பகுதி
மெட்ரோ ரயில்நிலையத்திற்கு
டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர்
*சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோநகர் வரை 9 கிலோ மீட்டர் துாரத்திற்கு 3,770 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளதாகவும இந்த பணியில் ஜனவரி மாதம் ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா , எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை சூட்டி அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் என்று அப்பகுதியில் நேதாஜி சமூக சேவை இயக்கம், உள்ளிட்ட அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை ஐந்தரை லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர், கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வறுமையால் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்,
நாடாளுமன்றம் கூடுகிறது
*கடந்த ஜூலை மாதமே தொடங்க வேண்டிய நாடாளுமன்றக்கூட்டத்தொடர் கொரோனா நோய் பரவலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது, வரும் செப்டம்பர் 14 ம்தேதி அக்டோபர் 1 ம்தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை நிலைக்குழு முடிவெடுத்துள்ளது,
இணையதளம் மூலம் சேர்க்கை
*கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் மழலையர் பள்ளி முதலான தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை 27 ம்தேதி முதல் செப்டம்பர் 25 ம்தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் மாணவர் சேர்க்கைக்கு www.rte. tn school.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது,
சிறைத்தண்டனை - அபராதம்
*முகக்கவசம் அணிதல், சமூக இடை வெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது, இதற்கான வரைவு சட்டம் முதலமைச்சர் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது,
அண்ணாமலை அண்ணாமலை
*ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் முதலமைச்சர் வேட்பாளர் இவர் தான் என்று பரபரப்பாக பேசப்பட்ட கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்ட பணியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார், கரூரை சேர்ந்த இவர் கர்நாடகத்தில் பரபரப்பாக இயங்கினார் தற்போது அவர் பாஜகவில் சேர்ந்தது, அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.,
*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான லட்சுமணன் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மரணமடைந்தார், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகியின் கணவர் விஸ்வநாதன் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தனர், இருவரின் மறைவுக்கும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்,
31 ம்தேதி முதல் ஆன்லைன் கல்வி
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் இணையதள வகுப்புகளை வரும் 31 ம்தேதி முதல் துவக்க வேண்டும் என்று கல்லுாரிக்கல்வித்துறை இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார்
ஆன்லைன் விண்ணப்பம்
*தமிழகத்தில் உள்ள 17 அமைப்பு சாரா வாரியங்களில் உறுப்பினர் புதுப்பித்தல் மாற்றம் செய்தல் மற்றும் நலத்திட்டங்களின் உதவிக்காக இனி வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் இன்று தொடங்கிவைத்தார், இனி தொழிலாளர்களை இவ்வசதிகளை http:\\labour.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது,
*பொறியியல் கல்லுாரிகளில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் செப்டம்பர் 17 ம்தேதி வெளியிடப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் கல்லுாரிகளுக்கான கட்டணம் உயராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்