தலையில்லாமல் தொப்பியை வைத்து ஆட்சி விரும்புகீறீர்களா என்று ரகுமான்கான் பேச்சை எம்ஜிஆரே வாய்விட்டு சிரித்தார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்
மறைந்த முன்னாள் அமைச்சர் .ரகுமான்கானின் உருவபபடத்தினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார் அப்போது அவர் பேசுகையி்ல்
1977-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் அண்ணன் இரகுமான்கானை நிறுத்தினார் கலைஞர் அது நாவலர் நின்ற முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில் இளைஞர் ரகுமான்கானை நிறுத்தினார் இரகுமான்கான் அவர்கள் ஒருமுறையல்ல; மூன்று முறை சேப்பாக்கத்தை தக்க வைத்துக் கொண்டார்.அந்த காலக்கட்டத்தில் தான் அவர் சட்டசபை ஸ்டாராக மாறினார். அவருடைய வாதத்திறமையை பற்றிச் சொல்வதாக இருந்தால் சொல்லிக் கொண்டே போகலாம்.
மதுவிலக்கை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமல்படுத்தியபோது, “உண்மையில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறீர்களா?" என்று ரகுமான்கான் கேட்டார்.உடனே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். எழுந்து, “எனது தாயார் சத்யா அம்மையார் மீது ஆணையாக அமல்படுத்துவேன்" என்று சொன்னார்.உடனே ரகுமான்கான் ''உங்கள் அமைச்சரவையில் இருக்கும் ஒருவரே தொடர்ந்து மது அருந்துவாரே, அவரை என்ன செய்வீர்கள்?" என்று கேட்டுவிட்டார்.இதற்கு எம்.ஜி.ஆரால் பதில் சொல்ல முடியாது என்பதை விட, யாரைச் சொல்கிறார் என்பதே பெரிய சர்ச்சையாகி விட்டது.
இப்படித்தான் ஒருமுறை ஆளுநர் உரை இல்லாமல், சட்டசபை கூட்டத்தொடரை எம்.ஜி.ஆர். கூட்டி நடத்தினார். “ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்குவது மரபா?" என்று ரகுமான்கான் கேள்வி எழுப்பினார். முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. “ஆளுநர் உரை என்பது, ஆட்சிக்குத் தலை போன்றது. அடுத்து நடக்கும் கூட்டத் தொடர் தொப்பி போன்றது. தலை இல்லாமல் தொப்பியை வைத்து ஆட்சி நடத்த விரும்புகிறீர்களா?" என்று தைரியமாகக் கேட்டார். எம்.ஜி.ஆரே சிரித்துவிட்டார். கேளிக்கை வரி சம்பந்தமான சட்டம் வந்த போது அதனை வரிக்கு வரி மறுத்துப் பேசினார். அமைச்சரால் பதில் அளிக்க முடியவில்லை.இறுதியாக இவர் ஒருவர் பேசிய பேச்சுக்காக மட்டுமே அந்தச் சட்ட முன்வடிவை அ.தி.மு.க. அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.