சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் கெளரி நியமிக்கப்பட்டுள்ளார், தென்னிந்தியாவின் தாய்ப்பல்கலைக்கழகமாக கருதப்படும் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் கெளரி நியமிக்கப்பட்டுள்ளார், அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி ஊடக பன்னோக்கு ஆய்வுப்பிரிவின் இயக்குனராக கெளரி தற்போது பணியாற்றி வருகிறார், கல்விப்பணியில் 37 ஆண்டுகள் அனுபவம் பெற்ற கெளரி இதுவரை 94 ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளார், சர்வதேச மாநாட்டுகளில் 30 ஆய்வுக்கட்டுரைகளை தாக்கல் செய்துள்ளார் உற்பத்தி பொறியியல் பிரிவில் இவரது வழிகாட்டுதலில் 13 மாணவர்கள் ஆராய்ச்சிப்பிரிவில் முனைவர் பட்டங்களை பெற்றுள்ளனர், தமிழக அரசின் டான்சி, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆகியவற்றில் இயக்குனர் பொறுப்பையும் கெளரி வகித்துள்ளார்,
தமிழகத்தை சேர்ந்த, சிறந்த கல்வியாளர் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை பல்கலைக்கழகததிற்கு புதிய துணைவே்ந்தர்