போலி விவசாயிகளுக்கு ஊ்க்கத்தொகை

*மத்திய அரசு ஆறுமாதத்திற்கு ஒரு முறை வழங்கும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையில் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன, : விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை பெற  விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் பகுதிகளில் வந்ததால் பரபரப்பு   வேளாண் உதவி இயக்குனர்கள் மூவர் பணியிடை நீக்கம் 
,*இ பாஸ் முறையை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆட்சியர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க வாய்ப்பு 
* பாபர் மசூதி இடிப்பு குறித்த வழக்கில்  செப்டம்பர் 30 ம்தேதிக்குள் தீர்ப்பு வழங்க லக்னோ சிபிஐ நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 
* பஞ்சாப் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தி அத்துமீறல் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை 
*பிரஸர் குக்கர் வெடிகுண்டு தயாரித்த உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்த  முகமது முஸ்தாக்கின் கான் என்பவர் கைது  இவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி என்று போலீசார் தெரிவித்துள்ளனர், 
*திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலில்  ஆண்டுதோறும் 150 கிலோ பிரம்மாண்டமான கொழுக்கட்டை படையல் நடக்கும், இந்த ஆண்டு உ்ச்சி பிள்ளையாருக்கு 5 கிலோ கொழுக்கட்டையும் கிழே உள்ள மாணிக்க விநாயகருக்கு 5 கிலோ கொழுக்கட்டையும் மட்டுமே படைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம், 


*இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு, கடைகள் அடைப்பு, நகரில் வாகனங்கள் காணப்படாததால் தெருக்கள் வீதிகள் வெறிச்சோடின,


97 பேர் பலி
*சென்னையில் இன்று கொரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் 5,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 6 ஆயிரத்து 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், சென்னையில் நோய்த்தொற்றுக்கும் 1, 298 பேர் ஆளாகியுள்ளதாகவும் தலைநகரில் மட்டும் ஆயிரத்து 40 குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, நோய்த்தொற்று காரணமாக 97 பேர் பலியானதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது,


 


ராஜினாமா இல்லை


*நாளை காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி கூடும் நிலையில் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டதாக இன்று செய்திகள் பரவின, சற்று முன் வந்த தகவலின் படி சோனியாகாந்தி ராஜினாமா செய்யவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் தெரிவித்துள்ளார், 


விசுவாசம் எங்கே


*அதிமுகவில் உயர் மட்டத்தில் உள்ள பொருப்பாளர்களான  எனக்கோ மற்ற யாருக்கோ நீங்கள்  விசுவாசமாக இருக்க வேண்டியதில்லை.  அனைவரும் ஒன்றாக கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 


தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.பரபரப்பு பேச்சு