உங்கள் காரின் புகைப்படத்தை காண்பியுங்கள் அந்த கார் தொடர்பான நிறுவனம் குறித்த அத்தனை விபரங்களையும் சொல்லும் அதிசய சிறுவன் பரமக்குடியில் இருக்கிறான் அந்த 8 வயதுள்ள சிறுவன் சந்தோஷ் கண்ணா (வயது 8).மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான் , சிறுவனின் தந்தை தண்டாயுதபாணி அரசு பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றுகிறார்,
இந்த சிறுவனின் தனித்திறமை என்னவெனில் காரின் போட்டோ காண்பித்தால் போதும் கார் தொடர்பான நிறுவனத்தின் பெயரையும் கூறி விடுவான். மேலும் பேப்பரில் வரும் மாவட்ட வாரியான கொரானா பாதிப்பையும் மனப்பாடமாக கூறி விடுவான்.
அதுபோல் எலெக்ட்ரானிக் பொருட்கள் 20 முதல் 30 பொருள்களை எளிதில் கூறி விடுவான். (ex: resistance, capacitance, PC board, red black, green wire uses, LED bulb).
இவன் முதல் வகுப்பு படிக்கும்போதே எங்காவது செல்லும் போது அவனை கடந்து செல்லும் கார்களின் பெயரை அவனே கூறுவான்.அந்த நிகழ்வு தான்,கடந்த பிப்ரவரியில் நடந்த பள்ளியின் ஆண்டு விழாவில் தனித்திறன் நிகழ்வில் கலந்து கொண்டு எல்லாருடைய பாராட்டையும் பெற்றான்.
பரமக்குடியே வியக்கும் அசாத்திய நினைவாற்றல் கொண்ட இந்த சிறுவனின் திறமையை நாமும் பாராட்டுவோம்.